பிளாஸ்டிக் போட்டா 'மஞ்சப்பை' வருதா...? சென்னையின் மாஸ் தொழில்நுட்பத்தைப் பார்த்து வியந்த ஜெர்மன் சுற்றுலா பயணி...!
Will plastic bags make you sick German tourist was amazed by Chennai mass technology
சென்னை மெரினா கடற்கரையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புதுமையான தானியங்கி இயந்திரம், ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த இயந்திரத்தின் செயல்பாட்டை கண்டு வியந்த அவர், அதனை பாராட்டிய காட்சிகள் அடங்கிய காணொலி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.மெரினா கடற்கரைக்கு வந்த அந்த வெளிநாட்டு பயணி, அங்கு வைக்கப்பட்டிருந்த நீல நிற தானியங்கி இயந்திரத்தை ஆர்வத்துடன் கவனித்துள்ளார்.

பின்னர், தன்னிடம் இருந்த பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டிலை அதற்குள் செலுத்தியுள்ளார். பாட்டில் இயந்திரத்திற்குள் சென்ற சில நொடிகளிலேயே, அருகில் அமைக்கப்பட்டிருந்த மற்றொரு கருவியில் இருந்து துணியால் செய்யப்பட்ட மஞ்சப்பை தானாகவே வெளியே வந்துள்ளது.பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டிலை குப்பையாக வீசுவதற்கு பதிலாக, அதை சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்பும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், பிளாஸ்டிக் பாட்டிலை வழங்கும் பொதுமக்களுக்கு மாற்றாக துணிப்பை வழங்கப்படுவது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய முயற்சியாக அமைந்துள்ளது.இந்த செயல்முறையை நேரில் கண்ட ஜெர்மனி சுற்றுலா பயணி, தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் இந்த வித்தியாசமான சுற்றுச்சூழல் நடவடிக்கையை ஆச்சரியத்துடன் பாராட்டியுள்ளார்.
குறிப்பாக, குப்பையாக கருதப்படும் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதிலாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிப்பை வழங்கும் நடைமுறை அவரை பெரிதும் கவர்ந்துள்ளது.மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வதை தடுக்கவும், பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடற்கரை மணல் மற்றும் கடல் பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசி எறிவதை தவிர்த்து, அவற்றை முறையாக சேகரித்து மறுசுழற்சி செய்ய பொதுமக்களை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிப்பைகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் இந்த முயற்சி, மெரினாவை மேலும் தூய்மையான கடற்கரையாக மாற்றுவதற்கான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு பயணி ஒருவர் இதனை வியந்து பாராட்டிய காணொலி இணையத்தில் பரவி வருவது, இந்த புதுமையான முயற்சிக்கு கூடுதல் கவனத்தை பெற்றுத்தந்துள்ளது.
English Summary
Will plastic bags make you sick German tourist was amazed by Chennai mass technology