#BREAKING || ஊட்டி அருகே கற்பழித்து கொல்லப்பட்ட பழங்குடியின மாணவி - முக்கிய குற்றவாளி சரண் - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பழங்குடியின பகுதியை சேர்ந்தவர் 15 வயதுடைய ஒன்பதாம் வகுப்பு மாணவி. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவி, மாலை வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

ஆனால் மாணவி எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், அங்கர்போர்டு அருகே உள்ள புதருக்குள் சிறுமி ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது, இறந்து கிடந்தது காணாமல்போன மாணவி என்பது தெரிய வந்தது.

மேலும் மாணவி பலத்த காயங்களுடன் அலங்கோலமான நிலையில் கிடந்துள்ளார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையை நடத்தியதில், மாணவியின் உறவினரான ரஜ்னேஷ் குட்டன், என்பவர் பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்திருந்த மாணவியை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்பு அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் காரை கொண்டு சென்ற ரஜ்னேஷ் குட்டன், அங்கு வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான ரஜ்னேஷ் குட்டனை தனிப் படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாணவி கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ரஜ்னேஷ் குட்டன்பைக்காரா காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து, மேலும் வேறு சிலருக்கு இந்த வழக்கில் தொடர்புள்ளதா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

main accused surrender in the tribal girl rape and murder case near Ooty


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->