கோவிந்தா கோஷம் முழங்கத் தொடங்கும் சித்திரைத் திருவிழா: வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தின் முழு விவரம்! - Seithipunal
Seithipunal


மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான, அழகர் மலையிலிருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பெருவிழா நாளை (ஏப்ரல் 27, 2026) கோலாகலமாகத் தொடங்குகிறது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருமாலிருஞ்சோலையில், சுந்தரராஜ பெருமாள் 'கள்ளழகர்' கோலங்கொண்டு மதுரைக்கு எழுந்தருளும் இந்தக் காட்சியைக் காண உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கானப் பக்தர்கள் மதுரையில் குவியத் தொடங்கியுள்ளனர்.

விழா கால அட்டவணை (ஏப்ரல் 27 - மே 5):

நாளை அதிகாலை அழகர் கோவிலில் விசேஷ பூஜைகளுடன் விழா தொடங்குகிறது. முக்கிய நிகழ்வாக, ஏப்ரல் 29-ம் தேதி மாலை 6:15 மணிக்குக் கண்டாங்கிப் பட்டு உடுத்தி, கையில் நேர்கம்பு ஏந்தி, 18-ம் படி கருப்பணசாமி முன்னிலையில் அனுமதி பெற்று கள்ளழகர் மதுரைக்குப் புறப்படுகிறார். ஏப்ரல் 30-ம் தேதி காலை மதுரை மூன்று மாவடியில் 'எதிர்சேவை' நிகழ்வு நடைபெறுகிறது. அன்று இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் தங்கும் அழகருக்குத் திருமஞ்சனம் நடைபெறும்.

வைகை ஆற்றில் இறங்குதல்:

விழாவின் உச்சகட்ட நிகழ்வாக, மே 1-ம் தேதி அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்டு, தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். அதிகாலை 5:35 மணி முதல் 5:55 மணிக்குள் "கோவிந்தா" கோஷம் விண்ணைப் பிளக்க அழகர் ஆற்றில் இறங்கும் காட்சியைக் காண வைகை ஆற்றின் இருபுறமும் மக்கள் வெள்ளம் அலைமோதும்.

மே 2-ம் தேதி தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்குச் சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்வும், அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடியப் புகழ்பெற்ற தசாவதாரக் காட்சியும் நடைபெறும். மே 4-ம் தேதி அதிகாலை 'பூப்பல்லக்கில்' அழகர் மீண்டும் மலைக்குத் திரும்புவார். மே 5-ம் தேதி அவர் இருப்பிடம் சென்றடைவார்.

அழகர் மலையிலிருந்து மதுரை வந்து மீண்டும் திரும்புவது வரை வழிநெடுகிலும் 490-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளையும், முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது. மதுரை மாநகரமே தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurais Grand Spectacle Kallalagars Celestial Journey to Vaigai Begins Tomorrow


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->