இஸ்லாம் மதத்திற்கு மாறிய இந்து பிற்படுத்தப்பட்டவர் அல்ல..!! மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!! - Seithipunal
Seithipunal


உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அக்பர் அலி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் "எனது குடும்பத்தினர் கடந்த 2008ம் ஆண்டு இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்கள். இதனை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தேன். 

அப்பொழுது பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என்ற பிரிவில் விண்ணப்பித்து எழுத்து தேர்வு எழுதினேன். எனினும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவில் வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் என் பெயர் இடம்பெறவில்லை. மாறாக பொது பிரிவில் எனது பெயர் இடம் பெற்று இருந்தது. எனவே தன்னை பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியராக கருதி வேலை வழங்க வேண்டும்" என மனு தாக்கல் செய்திருந்தார். அத்துடன் கடந்த 2015 ஆம் ஆண்டு மண்டல துணை வட்டாட்சியர் அளித்த லெப்பை வகுப்பு சாதி சான்றிதழையும் சமர்ப்பித்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் "மனுதாரர் ராமநாதபுரம் மாவட்ட காஜியார் அளித்த சாதி சான்றிதழை தாக்கல் செய்துள்ளார்.

அந்த சான்றிதழில் சத்தியமூர்த்தி என்பவர் முஸ்லிம் மதத்திற்கு மாறி உள்ளார் என்றும் இது அவரின் விருப்பத்தின் பெயரில் நடந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் மதம் மாறியவர் லெப்பை வகுப்பை சேர்ந்தவர் என்பதை ராமநாதபுரம் மாவட்ட காஜியார் அறிவிக்க முடியாது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தேர்வாணைய செயலாளர் பிறப்பித்த உத்தரவு சரிதான்" என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார். இதனை அடுத்து அக்பர் அலி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MaduraiHC sensational verdict Hindu convert to Islam is not backward class


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->