நெல்லை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பிடிவாரண்ட்... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியை சேர்ந்த பிராங்கிளின் ராஜ் என்பர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். அவர் தாக்கல் செய்த மனுவல் "பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் மேல்நிலை பள்ளியில் 2ம் நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் பி.டி அசிஸ்டன்ட் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றிருந்தும் எனக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை.

கடந்த 2020ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் 8 வாரத்தில் எனது மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால், தற்போது வரை எனது பதவி உயர்வுக்கான மனுவை அதிகாரிகள் பரிசீலினை செய்யவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தண்டபாணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி "நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரை கைது செய்து வரும் ஜன.20ம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிடுகிறது" என தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். மாவட்ட கல்வி அலுவலர்களை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்த விவகாரம் நெல்லையில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MaduraiHC issued arrest warrant for nellai education officers


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->