மதுரை - திருப்பதி தினசரி விமான சேவை... இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மதுரையில் இருந்து திருப்பதி விமான நிலையத்திற்கு, தினமும் விமான சேவை வழங்க இண்டிகோ நிறுவனம் முன்வந்துள்ளது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து திருப்பதி விமான நிலையத்திற்கு விமான சேவை வழங்கப்பட வேண்டும் என, திருப்பதிக்கு சென்று வரும் பயணிகள் நெடுங்காலமாக கோரிக்கை வைத்து இருந்தனர். இந்த நிலையில், தற்போது திருப்பதி பக்தர்களின் கோரிக்கை இண்டிகோ நிறுவதால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நவம்பர் 19 ஆம் தேதி முதல் மதுரை விமான நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு விமானம் இயக்கப்படும். மதுரையில் இருந்து திருப்பதிக்கு நவம்பர் 19 ஆம் தேதி இண்டிகோ நிறுவனம் சார்பாக முதல் விமானம் இயக்கப்படுகிறது. 

தினமும் மதுரை விமான நிலையத்தில் இருந்து மதியம் 03:00 மணியளவில் புறப்படும் விமானம், மாலை 04:20 மணியளவில் திருப்பதி விமான நிலையத்தை சென்றடையும். திருப்பதியில் இருந்து மீண்டும் மாலை 04:40 மணிக்கு புறப்படும் விமானம், மதுரைக்கு மாலை 06:40 க்கு வந்தடையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai To Tirupati Indigo Flight Daily Service Starts Nov 19 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->