மதுரை: சொத்துக்காக தாயை கொடூர கொலை செய்த மகன்கள்.. உடந்தையாக மனைவி, மகன்கள்.. பேரதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் சொக்கநாதன்பட்டி கிராமத்தை சார்ந்தவர் முத்துக்கருப்பன். இவரது மனைவி பாப்பம்மாள். இவர்களுக்கு நான்கு மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். மகன்களில் இருவர் இறந்துவிட்ட நிலையில், மூன்று மகள்களுக்கும் திருமணம் முடிந்து, இரண்டு மகன்கள் விவாகரத்து பெற்று சொக்கநாதன்பட்டியில் பெற்றோருடன் வசித்து வந்தனர். 

மூத்த மகன் பொன்ராம், திருமங்கலத்தில் வசித்து வரும் நிலையில், அடுத்துள்ள கண்ணன் பொட்டல்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சொக்கநாதன்பட்டியில் முத்துக்கருப்பன் - பாப்பம்மாள் தம்பதி பெயரில் 2.80 ஏக்கர் நிலம் உள்ளது. சொக்கநாதன்பட்டி அருகே திருமங்கலம் - மதுரை சுற்றுச்சாலை செல்வதால், நிலத்தின் மதிப்பு தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது. 

இதனால் முத்துக்கருப்பன் மகன் பொன்ராம் மற்றும் கண்ணன் நிலத்தை தங்கள் இருவருக்கும் பங்கிட்டு தரும்படி கேட்டுள்ளார். அதற்கு தாயார் பாப்பம்மாள் தனது மூன்று மகள்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு, காவல் நிலையத்திற்கு சென்று சமாதானம் பேசி எழுதியும் வாங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கடந்த 9ம் தேதி இரவு நேரத்தில் பாப்பா வீட்டுக்கு சென்ற கண்ணன், அவரது மகன் சிவன் (வயது 29), பொன்ராம் மற்றும் அவரது மகன் ரகு கணேஷ், குமார் ஆகிய 5 பேரும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இதன்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த மகன்கள் மற்றும் பேரன்கள் பாப்பம்மாளை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொலை குற்றத்தில் ஈடுபட்ட பொன்ராம், கண்ணன், சிவன், ரகு கணேஷ், குமார் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த பொன்ராம் மனைவி ராஜாத்தி, கண்ணன் மனைவி மாரியம்மாள் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Tirumangalam Sons Murder Mother due to Land Problem 11 November 2020


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal