மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இரு சுங்கச்சாவடிகள் வசூல் செய்ய தடை! உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி!
madurai Thoothukudi toll plaza HC Order
மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில், கட்டண வசூலை இடைக்காலமாக நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
அருப்புக்கோட்டை அருகே உள்ள எலியார்பத்தி சுங்கச் சாவடி 2011 முதல் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் சாலைகள் பல இடங்களில் சேதமடைந்து, வாகனங்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி விபத்துகள் மற்றும் போக்குவரத்து தடங்கலும் உருவாகி வருகின்றன.
இந்த நிலையில், சாலையை முறையாகச் சீரமைக்கும் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சாலையின் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.
மேலும், எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து இடைக்கால உத்தரவும் வழங்கப்பட்டது.
English Summary
madurai Thoothukudi toll plaza HC Order