எதிர்ப்பால் பின்வாங்கிய அறநிலைத்துறை: காணிக்கை உண்டியலில் போடும் சுற்றறிக்கை வாபஸ்!
Madurai Temple Archagar undiyal issue
மதுரையில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் போட வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கோயில் நிர்வாகம் அதனை வாபஸ் பெற்றது.
கடந்த 7ம் தேதி செயல் அலுவலர் பிறப்பித்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டது.
தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் திருக்கோயில் செயல் அலுவலர் விடுத்துள்ள அந்த அறிவிப்பில், "மதுரை நகர், நேதாஜி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டயுதபாணி சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்களால் போடப்படும் காணிக்கையினை உண்டியலில் செலுத்த உத்திரவிடப்படுகிறது.
இவ்வாறு அர்ச்சகர்கள் தட்டில் வரப்பெறும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்தும் பணியினை திருக்கோயில் மணியம் மற்றும் காவலர்கள் கவனித்தல் வேண்டும்.
தட்டு காணிக்கை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கோயில் தக்காரிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்ததால், அதனை ரத்து செய்து மதுரை மண்டல இணை ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
English Summary
Madurai Temple Archagar undiyal issue