மதுரை: தனியார் மழலையர் பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலி! - Seithipunal
Seithipunal


மதுரையில் உள்ள கே.கே. நகர் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் மழலையர் பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் 2025-26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை, அந்த பள்ளியில் படித்து வந்த நான்கு வயது ஆருத்ரா என்ற சிறுமி தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

பள்ளி வளாகத்தில் போதிய பாதுகாப்பின்றி திறந்தவையாக இருந்த தண்ணீர் தொட்டியில், கவனக்குறைவால் ஆருத்ரா தவறி விழுந்தார். அருகிலிருந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆழமான தொட்டியில் இருந்து சிறுமியை மீட்பது கடினமாயிருந்த நிலையில், தகவலறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு ஆருத்ராவை மீட்டனர்.

ஆனால், சிறுமிக்கு தேவையான சுயசாசிகை கிடைக்கவில்லை. பின்னர் மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கபட்டும், சிறுமி உயிரிழந்தார்.

சம்பந்தப்பட்ட பள்ளித் தலைவர் திவ்யா மற்றும் நான்கு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விவகாரம் தொடர்பாக அண்ணாநகர் போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

madurai School girl death water tank 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->