வரதட்சணை கொடுமையால் தவித்த பெண்.. கொலையை அரங்கேறி தற்கொலை நாடகம்?.. மதுரையில் சோகம்.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அம்பலகாரன்பட்டி பகுதியை சார்ந்தவர் பெரியசாமி. இவரது இளயமகள் சந்தரேஸ்வரி. இவருக்கும், மேலூர் கல்லம்பட்டி பகுதியை சார்ந்த பழனிக்குமார் என்பவருக்கும் கடந்த 3 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பழனிக்குமார் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில், கடந்த 4 ஆம் தேதியன்று சந்தரேஸ்வரி வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக மணமகன் வீட்டார் சார்பில் கொட்டாம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சந்தரேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதன்பின்னர், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், சந்தரேஸ்வரியின் பெற்றோர் அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகவும், கணவரின் குடும்பத்தார் வரதட்சணை கொடுமை செய்து வந்த நிலையில், அவர்கள் தங்களின் மகளை கொலை செய்துவிட்டார் என்றும் 50 க்கும் மேற்பட்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், இது குறித்து விசாரணை மேற்கொள்வதாக காவல் துறையினர் சமாதானம் பேசி அனைவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai girl suicide due to dowry police investigation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->