நடிகர் ரஜினிக்கு சிலை... அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை! திரும்பி பார்க்க வைத்த ரசிகர்!
Madurai fan worships Rajini idol
மதுரை, திருமங்கலம் நகரை சேர்ந்தவர் கார்த்திக். முன்னாள் ராணுவ வீரரான இவர் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார்.
தீவிர ரஜினிகாந்த் ரசிகரான இவர் தனது அலுவலகத்தில் ஒரு அறையில் நடிகர் ரஜினி புகைப்படங்களை வைத்து நாள்தோறும் வணங்கி வந்தார்.
இவரது பூஜை அறை கதவுகளில் ஸ்ரீ ரஜினி கோவில் என குறிப்பிட்டு தரிசன நேரம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அறை முழுவதும் நடிகர் ரஜினி நடித்த 'அபூர்வ ராகங்கள்' முதல் தற்போது வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் வரையிலான புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ரஜினியின் படத்திற்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை செய்கிறார். இந்நிலையில் சுமார் 3 அடி உயரத்தில் நடிகர் ரஜினியின் கற்சிலையை வடிவமைத்து வாங்கியுள்ளார்.

அவ்வாறு வாங்கப்பட்ட சிலைக்கு யாகம் வளர்த்து கும்பாபிஷேகம் நடத்துவது போன்ற பூஜைகளையும் செய்துள்ளார்.
பின்னர் சிலையை, கோவிலாக வழிபடும் அந்த அறையில் வைத்து ரசிகரான கார்த்திக் பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 6 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து மாலை அணிவித்து தீபாராதனை நடத்தி வருகிறார். இதற்கு உறுதுணையாக தனது பெற்றோரும், மனைவியும் இருப்பதாக கார்த்திக் தெரிவித்துள்ளார்.
English Summary
Madurai fan worships Rajini idol