CM ஸ்டாலின் ரோடு ஷோவுக்காக சாக்கடைக்கு திரை அமைப்பு! சர்ச்சை வீடியோ! - Seithipunal
Seithipunal


தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற உள்ளது. 30 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கு முழுக்க குளிரூட்டப்பட்டதாகும்.

முகப்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தை ஒத்த வடிவமைப்பு, மு.க. ஸ்டாலின், உதயநிதியின் பெரிய கட்-அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

பசுமை பூங்கா, செயற்கை நீரூற்று, 100 அடி உயர தி.மு.க. கொடிக்கம்பம் உள்ளிட்ட அலங்காரங்கள் இடம் பெற்றுள்ளன. கூட்டத்திற்கு 3,400 பொதுக்குழு உறுப்பினர்களும், மேலும் 4,000 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதுரை செல்லவுள்ள நிலையில், விமான நிலையத்தில் வரவேற்பும், பின்னர் மாலை ரோடு ஷோவும் நடைபெறவுள்ளது. இதில் பெருமளவு பொதுமக்கள் பங்கேற்கக் கூறப்பட்டுள்ளது.

இந்த ரோடு ஷோ பாதையில் உள்ள பந்தல்குடி கால்வாயில் சாக்கடை நீர் இருக்க காரணமாக, அதனை மறைக்க தி.மு.க.வினர் திரை அமைத்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் விளம்பரம் கூட மறைக்கப்பட்டதாகக் கூறி எதிர்ப்பு எழுந்தது. அதையடுத்து அந்த திரை அகற்றப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

madurai DMK MK Stalin Roadshow


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->