மதுரை: இரண்டாவது மனைவியின் 8 வயது மகளுக்கு பாலியல் தொல்லை.. காமுகன் கைது.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் மகபூபாளையம் முனியாண்டி கோவில் தெரு பகுதியை சார்ந்தவர் செல்வகுமார். இவன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், திருமணம் முடிந்து கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்மணியை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளான். 

அந்த பெண்ணிற்கு 8 வயது மகள் இருக்கிறார். இந்நிலையில், வீட்டில் ஆட்கள் இல்லாத சமயத்தில், தனது இரண்டாவது மனைவியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இதனால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 

சிறுமியின் உடல்நலக்குறைவு தொடர்பாக தாய் மகளிடம் விசாரணை செய்கையில், முனியாண்டியின் காமுக மறுபக்கம் தெரியவந்துள்ளது. மேலும், தனக்கு நடந்ததை கூறி சிறுமி தாயிடம் கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மை தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் முனியாண்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து காமுகனின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Culprit Arrest Sexual Torture Second Wife Daughter 23 Feb 2021


கருத்துக் கணிப்பு

அதிமுக கூட்டணியில் அமமுக இடம்பெறுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக கூட்டணியில் அமமுக இடம்பெறுமா?




Seithipunal