விளையாட்டுக்கு அரசின் பெரிய சப்போர்ட்...! ஒலிம்பிக் தங்கத்திற்கு ரூ.6 கோடி பரிசு...! - சித்தராமையா
Big government support for sports 6 Crore Prize for Olympic Gold Siddaramaiah
ஒலிம்பிக் கனவுகளுக்கு கர்நாடக அரசு கோடி ரூபாய் ஊக்கம் அளித்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றால் ரூ.6 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் சித்தராமையா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பெங்களூரில் கர்நாடக ஒலிம்பிக் சங்கம் சார்பில் நடைபெற்ற ‘கர்நாடக ஒலிம்பிக் – 2025’ விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர், மாநிலத்தின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
அங்கு உரையாற்றிய சித்தராமையா, “விளையாட்டுத் துறையை வளர்ப்பதில் காங்கிரஸ் அரசு உறுதியாக உள்ளது. ஒலிம்பிக் மேடையில் கர்நாடக வீரர்கள் தங்கம் வென்றால் ரூ.6 கோடி, வெள்ளி வென்றால் ரூ.4 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.3 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.
இந்த முடிவு வீரர்களின் உழைப்புக்கு அரசின் அங்கீகாரமாகும்” என்று தெரிவித்தார்.மேலும் அவர், “விளையாட்டு வீரர்களுக்காக அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
காவல்துறையில் 2 சதவீதமும், வனத்துறையில் 3 சதவீதமும் இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் விளையாட்டை தொழிலாகவும் வாழ்க்கைப் பாதையாகவும் தேர்வு செய்ய முன்வர வேண்டும்” என வலியுறுத்தினார்.
மேலும், 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு, இந்த அறிவிப்பு கர்நாடக விளையாட்டு வீரர்களிடையே புதிய நம்பிக்கையும் உற்சாகமும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Big government support for sports 6 Crore Prize for Olympic Gold Siddaramaiah