மருத்துவ கல்வி கட்டணம் செலுத்த இயலாமல், வாய்ப்பை தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு - தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திருப்பி அளிக்கப்படும் மருத்துவ இடங்கள் நிரப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவ படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த இயலாமல் தவறவிட்ட அரசு பள்ளி மருத்துவ கல்வி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

மதுரை உயநீதிமன்ற கிளை நீதிமன்றத்தில், " 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாமல் வாய்ப்பை தவறவிட்ட மாணவர்களுக்கு தமிழக அரசு மீண்டும் மறுவாய்ப்பு அளிக்க வேண்டும். நவம்பர் 21ஆம் தேதி அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான கட்டணங்கள் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. 

நவம்பர் 18 ஆம் தேதி நடந்த கலந்தாய்வில் பல அரசு பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்த இயலாமல், தங்களுக்கான வாய்ப்பை தவற விட்டனர் " என்று மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு கிடைத்தும், கல்விக்கட்டணம் காரணமாக வாய்ப்பை இழந்த மாணவர்கள் மனுதாக்கல் செய்தனர். 

இது தொடர்பான மனு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று மீண்டும் நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், " அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திருப்பி அளிக்கப்படும் மருத்துவ இடங்கள் நிரப்பப்படும் எனவும், மருத்துவ படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த இயலாமல் தவறவிட்ட அரசு பள்ளி மருத்துவ கல்வி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் " என்றும் தெரிவித்தது.

இதனையடுத்து இது தொடர்பான தமிழக அரசின் பதிலை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், " வறுமையால் மருத்துவ இடங்களுக்கான வாய்ப்பை தவறவிட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை தந்து அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் " என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதை மேற்கோளிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Court TN Govt Answer about Govt School Students Medical Seat 1 December 2020


கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்துAdvertisement

கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்து
Seithipunal