ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு: மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் மற்றும் தூத்துக்குடி உதவி கமிஷனர் கைது..!
Madurai Corporation Mayor's husband arrested in Chennai in Rs150 crore property tax fraud case
மதுரை மாநகராட்சியில் நடந்த, ரூ.150 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் ஸ்டாலின் உத்தரவால் மாநகராட்சியின் ஆளுங்கட்சியை சேர்ந்த ஐந்து மண்டல தலைவர்கள், இரு நிலைக்குழு தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், குறித்த சொத்து வரி முறைகேடு தொடர்பாக, மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் சென்னையில் போலீசார் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக, மதுரை அழைத்து சென்றுள்ளனர்.
இந்த ரூ.150 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு தொடர்பாக, ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் உட்பட இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்ட்டுள்ளனர். இவர்களுடன் பில் கலெக்டர்கள் உட்பட 19 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அ.தி.மு.க., தொடர்ந்த வழக்கு அடிப்படையில், இம்முறைகேட்டை தற்போது மதுரை டி.ஐ.ஜி., அபினவ் குமார் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது.

மேலும், தூத்துக்குடியில் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் சுரேஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். குறித்த முறைகேடு நடந்த காலகட்டத்தில் இவர் மதுரையில் பணியாற்றி உள்ளார்.இதனால்சுரேஷ்குமாரை, விசாரணைக்காக போலீசார் மதுரை அழைத்து சென்றுள்ளனர்.
சொத்து வரி குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் என்பவர் அளித்த போலீசில் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Madurai Corporation Mayor's husband arrested in Chennai in Rs150 crore property tax fraud case