மதுரை சித்திரை திருவிழாவில் எந்த ஒரு சாதி பாகுபாடும் இல்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு!
Madurai Chithirai Festival Caste discrimination High Court Madurai Bench
மதுரை சித்திரை திருவிழா, சைவம் மற்றும் வைணவத்தின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் முன்னணிப் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாகக் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், மே 12-ந் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவைப் பார்வையிட, பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள், மதமோ சாதியோ பார்க்காமல் நீர், மோர், உணவு வழங்கி சமூக ஒற்றுமைக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தனர்.
இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழாவின் சமூக ஒற்றுமையைச் சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, கரூரில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டில் தடைகள் ஏற்பட்டதாகக் கூறிய வழக்கை விசாரிக்கும் போது முக்கியமான கருத்தை தெரிவித்தது.
அதில், “வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வில் எந்த ஒரு சாதி பாகுபாடும் காணப்படவில்லை. இதுபோன்று அனைத்து பகுதிகளிலும், விழாக்கள் சமத்துவ அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். அதிகாரிகள் நேரில் சென்று உண்மை நிலையை அறிய வேண்டும். திருவிழாக்களின் நோக்கமே ஒற்றுமையை வளர்ப்பது” என நீதிபதிகள் வலியுறுத்தினர்.
English Summary
Madurai Chithirai Festival Caste discrimination High Court Madurai Bench