மதுரை | அயோத்தி சாமியாரின் உருவ பொம்மை எரிப்பு!
Madurai Burn effigy Ayodhya preacher
மதுரையில் தமிழ் புலிகள் கட்சியினர் அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த அயோத்தி சாமியாரின் உருவ பொம்மையை தீட்டு எடுக்க முயன்றதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழிப்போம் என தெரிவித்ததற்கு அயோத்தி சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா என்பவர் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் உதயநிதியின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ. 10 கோடி என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தமிழ் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அயோத்தி சாமியாரின் உருவ பொம்மையை மாநகர மாவட்ட செயலாளர் தலைமையில் தீட்டு எரித்தனர்.
மேலும் கோல்வால்கர், சாவர்க்கர் இருவரின் படங்களுக்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இந்த சம்பவத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர், தென் மண்டலச் செயலாளர், மாநில செய்தி தொடர்பாளர் உள்ளிட்ட 10 பேர் கலந்து கொண்டனர்.
English Summary
Madurai Burn effigy Ayodhya preacher