மதுரை || பலகாரம் தயாரித்து விற்பனை செய்யும் கைதிகள்.!  - Seithipunal
Seithipunal


பல்வேறு குற்றச்செயல்களை செய்து தண்டனை அனுபவித்து வரும் சிறை கைதிகள் உழைத்து பணம் சம்பாதிக்கும் வகையில் சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதன் படி, மதுரை மத்திய சிறையில் இருக்கும் கைதிகள் வருகிற தீபாவளி பண்டிகைக்கு தேவையான பலகாரங்களை விதவிதமாக செய்து மக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். 

இதையடுத்து மதுரை சிறை பஜாரில் உள்ள கைதிகள் தயார் செய்யும் பலகாரங்களை வாங்கி வந்த சுப்பிரமணியன் என்பவர் தெரிவித்ததாவது, சிறை பஜாரில் கைதிகள் தயார் செய்யும் இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகள் மிகவும் சுவையாக உள்ளது. நான் ஆண்டுதோறும்  தீபாவளி பண்டிகைக்கு சிறை பஜாரில் பலகாரங்கள் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

சிறை பஜாரில் தீபாவளி பலகாரங்கள் விற்பனை செய்வது தொடர்பாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, "கைதிகள் மூலம் ஏற்கனவே தின்பண்டம் தயாரித்து சிறை பஜாரில் விற்பனை செய்து வருகிறோம். 

இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி, சிறப்பு விற்பனை செய்யவதற்கு முடிவு செய்தோம். இதற்காக மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளில் சமையல் கலையில் சிறப்பு வாய்ந்த 100 கைதிகளின் பட்டியலை தயார் செய்து அவர்கள் மூலம் தீபாவளி பண்டிகைக்கு விற்பனைக்காக விதவிதமான பலகாரங்களை செய்து வருகிறோம். இதற்காக கைதிகள் நான்கு குழுக்களாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையடுத்து, மதுரை ஞானஒளிபுரம் ரோட்டில் சிறை நிர்வாகம் சார்பில், ஓட்டல் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஓட்டலில் குறைந்த விலையில் உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, தேநீர் 8 ரூபாய்க்கும், வடை 5 ரூபாய்க்கும், இட்லி-5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தமிழகம் முழுவதும் சிறை பஜார் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல், சிறை வளாகத்தில் பயிரிடப்படும் விளைபொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. 

தற்போது, மதுரை மத்திய சிறையில், லட்டு, பூந்தி, ஜிலேபி, மைசூர் பாகு, பாதுஷா உள்ளிட்டவை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். எங்களின் இனிப்பு தின்பண்ட தயாரிப்பில் 'திருப்பதி லட்டு' குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த லட்டை நாங்கள் நெய், முந்திரி, சாதிக்காய், ஏலக்காய் மற்றும் பச்சை கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து தயார் செய்து வருகிறோம். இதனால் அந்த லட்டுக்கு ஆன்மீக அம்சம் கிடைத்து,  வாடிக்கையாளரிடம் ஆதரவை பெற்று உள்ளது. 

மதுரையில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் எங்களிடம் தயாரிக்கும் பலகாதங்களை மொத்தமாக கொள்முதல் செய்து, ஊழியர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றன. அதேபோல், மதுரை மத்திய சிறை பஜார் அங்காடியில் காராச்சேவு, மிளகு சேவு, சீவல், காராபூந்தி, மிக்சர் உள்ளிட்டவை மிகவும் தரமாக தயாரிக்கப்பட்டு மலிவான விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. 

இங்கு சர்க்கரை சேர்க்காத உணவு பொருட்களை தயாரிக்க வேண்டும் என்று மதுரை சரக டி.ஐ.ஜி. பழனி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, சுக்கு உள்பட இயற்கை மூலிகைகளுடன் வெல்லத்தால் ஆன அதிரசம் தயாரித்து விற்பனை செய்கிறோம்.

சிறை பஜார் மூலம் கிடைக்கும் லாபத்தில் 20 சதவீதம் கைதிகளுக்கு கூலியாகவும், 20 சதவீதம் போலீசார் நலநிதிக்கும், 20 சதவீதம் பொருட்களை கொள்முதல் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. மீதம் உள்ள 40 சதவீதம் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் மூலம் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. 

மதுரை மத்திய சிறையில் சில மாதங்களுக்கு முன்பு திறந்த வெளியில் பயிரிடப்பட்ட தர்பூசணியை 3 டன்கள் வரை விற்பனை செய்து, மார்க்கெட்டில் 30 ரூபாய் என்றால் நாங்கள் 20 ரூபாய்க்கு கொடுத்தோம். அதேபோல், திருச்சியில் உள்ள மத்திய சிறையில் காவிரி ஆற்றின் மூலம் நெல் விவசாயமும், கோவை சிங்காநல்லூர் சிறையில், செக்குகள் மூலம் எண்ணெயும் தயாரிக்கப்படுகிறது.

சிறை பஜாரின் நோக்கம் கைதிகளின் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு குறித்தே ஆகும். சிறையில் இருந்து வெளியே செல்லும் கைதிகள் உடல் அளவிலும், மன அளவிலும் சோர்வுடன் இருப்பார்கள். அவர்களுக்கு வீட்டில் அங்கீகாரம் கிடைக்காது. அதனால், நாங்கள் அவர்களுக்கு தொழில் கற்று கொடுத்து வருகிறோம். 

இதுவே அவர்களுக்கு - குடும்பத்தை பொருளாதார ரீதியில் வளப்படுத்துவதற்கான ஆதாரமாக அமையும். மதுரை மத்திய சிறையில் தீபாவளி பலகாரம் விற்பனை மூலம் டி.ஐ.ஜி பழனி, சூப்பிரண்டு வசந்தகண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், கைதிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை  ஏற்படுத்தி வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai accuest make in sweets


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->