தொப்பி, தாடி! சிசிடிவியில் சிக்கிய ஆதாரம்! பாய்ந்த வழக்கு!
Madurai Aathinam case ccttv
சென்னை காட்டாங்குளத்தூரில் நடந்த அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பேசிய 293-வது மதுரை ஆதீன பீடாதிபதி ஹரிஹர ஞான சம்பந்ததேசிக சுவாமிகள், தன்னை கொலை செய்ய திட்டமிட்ட சதி ஒன்றாக கார் விபத்து ஏற்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
உளுந்தூர்பேட்டை அருகே அவரது கார் மீது அடையாளம் தெரியாத மற்றொரு கார் உரசியதாகவும், டிரைவர் கூறியதுப்படி அந்த வாகனத்தில் எண் பதிவு இல்லாமலும், ஒட்டுநர் தொப்பி மற்றும் தாடியுடன் வந்திருந்ததாகவும் தெரிவித்தார். விபத்துக்குப் பிறகு அந்த கார் நிற்காமல் தப்பிச் சென்றதாகவும் அவர் கூறினார்.
ஆனால், போலீசில் புகார் அளிக்கவில்லை என்றும், ஆண்டவனிடம் தான் மனவேந்தியதாகவும் சுவாமிகள் கூறினர்.
அரசு மற்றும் போலீசாரின் அணுகுமுறை சிறுபான்மையினருக்கே சாதகமாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
விபத்து தொடர்பாக விசாரித்த கள்ளக்குறிச்சி போலீசார், ஆதீனத்தின் காரை ஓட்டியவர் மீது அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் இயக்கியதாக வழக்கு பதிவு செய்தனர்.
சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகளும் வெளியானது விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Madurai Aathinam case ccttv