தமிழர் குருதியில் பாவேந்தரின் வரிகள் கலந்தோட வேண்டியது காலத்தின் தேவை; முதலமைச்சர் ஸ்டாலின்..! - Seithipunal
Seithipunal


பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் "தமிழ் வார விழா" நிகழ்வு நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளில் 05 தமிழறிஞர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களுக்கு நூலுரிமைத் தொகை மற்றும் பல்வேறுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:- 

திராவிட இன எழுச்சி - பொங்கும் தமிழ் உணர்வு - பெண் விடுதலை - சமத்துவம் - சமூகநீதி - தமிழ் இலக்கிய அழகியல் - தமிழர் வாழ்வியல் ஆகியவற்றுக்கு அடையாளம் பாவேந்தர் பாரதிதாசன்!

எங்கும் அவர் கவிதைகள் முழங்கிடக் கண்டு உள்ளம் பொங்குகிறது, பெருமகிழ்ச்சியால்; பேருணர்ச்சியால்! தமிழர் குருதியில் பாவேந்தரின் வரிகள் கலந்தோட வேண்டியது காலத்தின் தேவை! தமிழ்நாடெங்கும் நடைபெற்ற தமிழ்வாரவிழா-வில் பங்கெடுத்த இளைஞர் பட்டாளமே…

பாவேந்தரால் பரிசுகள் வென்றீர்; வாழ்த்துகள்.இது போதுமா?
நம்முடைய களம் பெரிது - அதில் நாம் பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது! தொடர்ந்து கொண்டு செல்லுங்கள் பாவேந்தரின் கருத்துகளை எல்லோரிடமும். தங்கத்தமிழ் தந்த அவரது புகழ் ஓங்குக.தமிழர் வெல்க. என்று பதிவிட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It is the need of the hour for Pavendhar lines to be mixed with the blood of the Tamils Chief Minister Stalin


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->