நாயை காப்பாற்ற முயன்ற 14 வயது சிறுவன் குட்டைக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு..!
The boy tried to save the dog fell into the pond and died tragically
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பருவாய் கிராமத்தை சேர்ந்த சக்திவேலின் மகன் 14 வயதுடைய மணிகண்டன். இவர் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தவர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த மாணவர் தனது வளர்ப்பு நாயையும் தன்னுடன் வெளியில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது சுமார் 15 அடி ஆழமான குட்டை அருகே மாணவன் சென்று கொண்டிருந்த போது, சிறுவனின் வளர்ப்பு நாய் எதிர்பாராத விதமாக தண்ணீர் குட்டையில் இறங்கியுள்ளது.
அந்த குட்டை ஆழமாக இருந்ததை அறியாத சிறுவன் நாயை காப்பாற்ற முயற்சி செய்து குட்டைக்குள் தவறி விழுந்துள்ளார். இதனால் சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The boy tried to save the dog fell into the pond and died tragically