அரசு கட்டிடத்தில் மாட்டுச் சாணம் சார்ந்த பெயிண்ட் - ஆதித்யநாத்துக்கு அகிலேஷ் யாதவ் பதில்.!
ahilesh yadav answer adhithyanath announce cow dung based paint
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தியபோது பசு பாதுகாப்பு மையங்கள் தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், மாட்டுச் சாணம் சார்ந்த இயற்கை வண்ணப்பூச்சு அரசு கட்டிடங்களில் இடம்பெற வேணடும், அதுவும் மிகப்பெரிய அளவிலான உற்பத்தியுடன் நடைபெற வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், "மாட்டுச் சாணம்: பாஜக அரசின் புதிய சாதனை" என்றுத் தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக செய்தி தொடர்பாளர் பதிலளித்துள்ளதாவது:-
"அகிலேஷ் யாதவ் மாட்டுச் சாணம் மற்றும் கால்நடைகளை வெறுக்கிறார். ஆஸ்திரேலியா சென்ற பிறகு அவர் இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகளை மறந்துவிட்டாரா, அல்லது தனது திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பசு, கங்கை மற்றும் கீதையை அவமதிக்கிறாரா?" என்றுத் தெரிவித்தார்.
English Summary
ahilesh yadav answer adhithyanath announce cow dung based paint