மற்ற ஆதீனங்கள் தமிழக அரசுக்கு அடிபணிந்து செல்லும் போது, நான் மட்டும் எதற்காக எதிர்த்து நிற்க வேண்டும் - மதுரை ஆதினம் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தருமபுரம் பட்டணப்பிரவேசத்துக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு மதுரை ஆதீனம் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

தருமபுரம் ஆதீன பட்டண பிரதேசத்திற்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று, மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில் இந்து மதத்தை இழிவாக பேசுவது யாராக இருந்தாலும் நான் கேள்வி கேட்பேன் என்றும், இந்து மதத்திற்காக நான் குரல் கொடுப்பேன் என்றும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதினத்திடம் 'தமிழக அரசு ஆன்மிக அரசா?' என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு,  .இப்போதைக்கு நான் கருத்து சொல்லமாட்டேன்' என்று மதுரை ஆதினம் தெரிவித்தார்.

மேலும், மற்ற ஆதீனங்கள் தமிழக அரசுக்கு அடிபணிந்து செல்லும் போது, நான் மட்டும் எதற்காக எதிர்த்து நிற்க வேண்டும் என்ற கேள்வியையும், மதுரை ஆதீனம் எழுப்பியுள்ளார். 

மற்றவர்களைப்போல் நானும் அரசோடு ஒன்றிணைந்து போய்விட்டேன் என்றும் மதுரை ஆதீனம் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது என்று மன்னார்குடி ஜியர் தெரியாமல் சொல்லிவிட்டார் என்றும் மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai Aadhinam say about tngovt may 2022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->