தேர்தலில் 3ம் பாலினத்தவருக்கும் இட ஒதுக்கீடு வழங்குக.!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் நயினார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவருக்கு நிலம் ஒதுக்கியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.

மேலும் மூன்றாம் பாலினத்தவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மூன்றாம் பாலினத்தவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய ஆட்சியருக்கு உத்தரவிட்டதோடு உள்ளாட்சி அமைப்புகளான தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர் போட்டியிடுவதற்கு ஏதுவாக இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHC ordered to give reservation to 3rd gender in election


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->