வாச்சாத்தி சம்பவம் || 269 பேரும் குற்றவாளிகளே! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


கடந்த 1992 ஆம் ஆண்டு தர்மபுரி அருகே வாச்சாத்தி மலை கிராமத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. சிபிஐ நடத்திய விசாரணையில் காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறையை சேர்ந்த 269 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் வழக்கு தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின் பொழுது பலர் உயிரிழந்த நிலையில்
குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் தீர்ப்பு நாளன்று உயிருடன் இருந்த 215 பேரும் குற்றவாளிகள் எனகீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய வரலாற்றி ஒரே வழக்கில் அதிக குற்றவாளிகள் தண்டனை பெற்ற வழக்கு இதுவாக இருந்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 1 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து குற்றவாளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி வேல்முருகன் குற்றவாளிகள் தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீடு வழக்குகளையும் தள்ளுபடி செய்து தர்மபுரி நீதிமன்றம் வழங்கிய உறுதிசெய்துள்ளார்.

மேலும் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு நிவாரணமாக 10 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிவாரணத் தொகையில் 5 லட்சம் ரூபாயை குற்றவாளிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அரசு வேலை அல்லது சுய தொழில் தொடங்கும் வகையில் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தால் அதனை ரத்து செய்து அவர்களை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்கவும் தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் மற்றும் நலத்திட்ட போதிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MadrasHC has held 269 people guilty in the Vachchathi incident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->