50 ஆயிரம் அரசு ஊழியர்கள்! ரூ.230 கோடி சம்பளம் மாயம்! அதிரவைக்கும் மத்திய பிரதேச மோசடி!
Madhya Pradesh Govt Salary scam
மத்திய பிரதேசத்தில், முதலமைச்சர் மோகன் யாதவ் (பா.ஜ.க ஆட்சி) தலைமையில் ஆட்சி நடந்துஇ கொண்டு இருக்கும் நிலையில், அம்மாநில அரசு ஊழியர்களின் சம்பளமாக ரூ.230 கோடி முறைகேடாக எடுக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 50,000 அரசு ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாகவே சம்பளம் வழங்கப்படவில்லை என்று அளிக்கப்பட்டுள்ள புகாரில், அந்த ஊழியர்கள் அரசு ஆவணங்களில் இருந்தும், டிசம்பர் 2024 முதல் அவர்களுக்கு சம்பளம் செலுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பள பட்டியலில் முறைகேடாக அல்லது போலியாக சேர்க்கப்பட்ட ஊழியர்கள் பெயர்களின் மூலம் ரூ.230 கோடி வரை ஊழல் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டு, அனைத்து துறைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தங்கள் அலுவலகங்களில் அங்கீகாரம் இல்லாத முறைகேடாக ஊழியர்கள் எவரும் பணியாற்றவில்லை என உறுதி செய்யும் அறிக்கையை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
English Summary
Madhya Pradesh Govt Salary scam