ஒமிக்ரான் வைரஸ் குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


கடந்த 11 ம் தேதி  ஆப்ரிக்காவில் புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ்க்கு ஒமிக்ரான் என பெயரிட்டுள்ளனர். ஒமிக்ரான் என்ற இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.  இந்த வைரஸ் ஸ்பைக் புரோட்டினில் 32 வகைகளில் உருமாற்றம் அடைவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒமிக்ரான் வைரஸ் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டதான் அவை என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என உறுதி செய்யப்படவில்லை. ஆனால், அவை மோசமான பாதிப்புகளையே ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தென்னாப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, மொசாம்பிக், மாலவி, லெசோதோ ஆகிய நாடுகளில் 100 மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், உலக நாடுகள் விமானநிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை. 11 நாடுகளில் இருந்து வந்த 477 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரிசோதனை நடத்தியதில் யாருக்கும் தொற்று இல்லை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ma subramanian press meet about omicron


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->