நரபலி அச்சம்| மத்திய பிரதேச பெண்ணுக்கு தமிழ்நாடு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்! சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம்! - Seithipunal
Seithipunal


நரபலி அச்சம் காரணமாக, பாதுகாப்பு கோரி மத்திய பிரதேசத்தை சேர்ந்த முதுகலை பட்டதாரி ஷாலினி சர்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

அவரின் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "என்னுடைய வளர்ப்புத் தாய் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர். மாந்திரீகங்களில் நம்பிக்கை கொண்ட அவர், ஏற்கனவே தனது 10 வயது சகோதரனை நரபலி கொடுத்துள்ளார்.

என் சகோதனை போலவே மேலும் இருவரையும் நரபலி கொடுத்து உள்ளார். கடந்த 17ஆம் தேதி என்னையும் வலுக்கட்டாயமாக போபாலுக்கு கடத்தி சென்றுவிட்டனர். என்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக நன் மத்திய பிரதேசத்தில் இருந்து தப்பி தமிழகம் வந்துள்ளேன். 

தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால் நான் இங்கு வந்தேன். எனக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, ஷாலினி சர்மா அளித்த புகாரில் எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போபால் காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், இந்த நூற்றாண்டிலும் பில்லி சூனியம், மாந்திரீகம் ஆகியவற்றை நம்பி, நரபலி கொடுக்கப்படுவதாக கேள்விப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

அப்போது, அப்பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை நீதிபதி முன் உத்தரவாதம் அளித்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

M P Lady TN Police Chennai HC


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->