திருவள்ளூரில் சரக்கு ரெயிலில் தீ விபத்தின் எதிரொலி: ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு..!
Change in train services following fire in freight train in Thiruvallur
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயில், திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே, தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. அங்கு பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் 10 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், திருவள்ளூரில் தீ விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் டேங்கர்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தண்டவாளத்தில் இருந்து விலகிய டேங்கர்களை கிரேன் மூலம் அப்புறத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல்- பெங்களூரு சதாப்தி விரைவு ரெயில் அரக்கோணத்தில் இருந்து புறப்படும் என்றும், மாலை 05.30 மணிக்கு புறப்பட இருந்த சதாப்தி விரைவு ரெயில் சென்ட்ரல்- அரக்கோணம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் செல்ல வேண்டிய ரெயில், இரவு 07.30 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. அத்துடன், சென்னை சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல வேண்டிய நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், இரவு 09.05 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்ல வேண்டிய ரெயில், இரவு 10 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
English Summary
Change in train services following fire in freight train in Thiruvallur