குருகுல பள்ளி விடுதியில் சோகம்: தூங்குவதற்கு இடம் பிடிப்பதில் மோதல்: 06-ஆம் வகுப்பு மாணவன் பலி: 10 வகுப்பு மாணவன் வெறிச்செயல்..! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூர் பகுதியில் குருகுல பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் விடுதியில் அனுராக் என்ற 13 வயது சிறுவன் தங்கி படித்து வந்துள்ளான். இந்நிலையில், அந்த விடுதிக்கு ராம் லக்கன் என்ற 18 வயதான 10-ஆம் வகுப்பு மாணவன் புதிதாக வந்துள்ளான். 

இந்நிலையில், இரவில் படுப்பதில் இடம் பிடிப்பதற்காக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அனுராக்கை ராம் லக்கன் கையால் குத்தியும், உதைத்து கடுமையாக தாக்கியும் உள்ளான். இதனால், அனுராக்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவனுடைய மூக்கு மற்றும் காதுகளில் ரத்தம் வந்துள்ளது.

இந்த சம்பவம் பற்றி அறிந்து, அவனை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அனுராக்கை கடுமையாக தாக்கிய விவரங்களை லக்கன் ஒப்புக்கொண்டுள்ளான். இதனால், லக்கனை போலீசார் கைது செய்து இன்று சிறையில் அடைந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A 6th grade student died in a fight over a place to sleep in a Gurukul school hostel


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->