காதலி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய குடிகார காதலன்: பேசுவதை தவிர்த்ததால் விபரீத முடிவு..!
Boyfriend arrested for throwing petrol bomb at girlfriends house because she refused to talk
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள அரசூர்பேட் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யதர்ஷினி. இவரது தாய் தந்தை இறந்துவிட, பாட்டி சகுந்தலா (63) உடன் வசித்து வருகிறார். திவ்யதர்ஷினி வில்லியனூர் ஒரு தனியார் வணிக நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஷியாம் (22) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இவரது காதலன் ஷியாமுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதால், அடிக்கடி மது குடித்து விட்டு அநாகரீகமாக நடந்து கொண்டதால் அவரிடம் பேசுவதை, திவ்யதர்ஷினி கடந்த சில மாதமாக தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும் அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் ஷியாம் சென்று பேசுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனாலும், திவ்யதர்ஷினி ஷியாமுடன் பேசுவதை தவிர்த்து வந்ததால் ஷியாம் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இதனால், கடந்த 03 நாட்களாக திவ்யதர்ஷினி வீட்டின் மீது கற்களை வீசி மிரட்டி வந்த ஷியாம் இரவு பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி, திரி வைத்து வெடிகுண்டு தயார் செய்து பிரியதர்ஷினி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தன்னிடம் பேசாமல் இருந்தால் கொலை செய்து விடுவேன் என திவ்யதர்ஷினியை மிரட்டியுள்ளார். அத்துடன், அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். பலத்த சத்தத்துடன் பெட்ரோல் குண்டு வெடித்தில் வீட்டில் இருந்தவர்கள் பதறி வெளியே ஓடி வந்துள்ளனர்.
இதன் போது அந்த வீட்டின் கதவு பகுதி தீ பற்றி எரிந்துள்ளது. தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிய ஷியாமை கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Boyfriend arrested for throwing petrol bomb at girlfriends house because she refused to talk