பேராசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைகள்: 141 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள அண்ணா பல்கலைக்கழகம்..!
Anna University has sent notices to 141 colleges
நடப்பு கல்வி ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து நடந்து முடிந்துள்ளது. அதன்படி, அதிகமான மாணவர்கள் பங்கேற்கும் பொதுப் பிரிவு கலந்தாய்வு நாளை தொடங்கவுள்ளது.
இந்நிலையில், பேராசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைகள் இருக்கக்கூடிய 141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ள குறைபாடுகளை அடுத்த 45 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிபந்தனைகளை சரி செய்யவில்லை என்றால் அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள 141 கல்லூரிகள் எவை எவை என்று தெரியாத சூழலில், அந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்தால் அவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்..? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
குறித்த 45 நாட்களுக்குள் குறைகளை சரி செய்யாத சூழல் ஏற்பட்டால், அந்த கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு மிகப்பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் என்று கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
English Summary
Anna University has sent notices to 141 colleges