விஜய் பக்கம் வீசும் அதிஷ்ட காற்று!விஜய்யுடன் கைகோர்க்கும் டிடிவி- ஓபிஎஸ்?பலம் பெறும் தவெக! அதிர்ச்சியில் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநில அரசியல் பரபரப்பாக மாறியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் அதிரடியாக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஓபிஎஸ், “பாஜகவின் கூட்டணியில் தங்களுக்கு உரிய மரியாதையும், இடமும் வழங்கப்படவில்லை” என்ற காரணத்தைக் கூறி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து இன்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், NDA-வில் துரோகம் அதிகம் நிலவுவதால் அங்கிருந்து விலகுவதாக அறிவித்து அரசியல் அதிர்வை ஏற்படுத்தியுள்ளார்.

“துரோகிகள் திருந்துவார்கள் என நினைத்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. ஆகையால் வெளியேறுகிறோம்” என்று கூறிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக குறிவைத்து தாக்கினார்.

இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஓபிஎஸ் – டிடிவி தினகரன் அடுத்தடுத்த படிகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்கள் கிளம்பி உள்ளன. சிலர், சசிகலா மற்றும் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனுடன் இணைந்து தனி அணியை உருவாக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர். மற்றொரு பக்கம், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பக்கம் இவர்களின் கவனம் திரும்பியிருப்பதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கு அடிப்படையாக, சமீபத்தில் விஜய்யைத் திறம்படப் பாராட்டிய டிடிவி தினகரனின் பேச்சும் உள்ளது. “2006-இல் விஜயகாந்த் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியதைப் போலவே, 2026 தேர்தலில் விஜய்யும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். இது அனைத்து கட்சிகளுக்கும் பாதிப்பை உண்டாக்கும்” என அவர் கூறியிருந்தார்.

அதேபோல், விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என கேட்கப்பட்டபோது, ஓபிஎஸ் “எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று பதிலளித்தது, அவரும் அந்த வாய்ப்பை திறந்துவைத்துள்ளதாகக் காட்டுகிறது.

இதனால், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் சேர்ந்து விஜய்யின் தவெக பக்கம் செல்லுமா, அல்லது சசிகலா – செங்கோட்டையன் இணைந்து தனி அணியை அமைப்பார்களா என்பது தற்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

 அடுத்த சில வாரங்களில் இவர்களின் முடிவு, 2026 தேர்தல் கூட்டணிக் கணக்கீட்டில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lucky winds blowing in Vijay direction TTV OPS joining hands with Vijay Thaveka will gain strength Stalin in shock


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->