மக்களே கவனிங்க! சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க இனி பயோமெட்ரிக் கட்டாயம்!  
                                    
                                    
                                   LPG Gas cylinder Biometric 
 
                                 
                               
                                
                                      
                                            சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) சிலிண்டர் வினியோகத்தில் பயோமெட்ரிக் அங்கீகாரம் கட்டாயமாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மோசடியை தடுக்கும் நோக்கில், 2024 மார்ச் முதல் இந்த முறை நடைமுறையில் உள்ளது.
வாடிக்கையாளர்கள் ஆதார் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் தகவலை தங்கள் கியாஸ் ஏஜென்சியில் பதிவு செய்கின்றனர் விழிப்புணர்வு குறைவதால், சிலிண்டர் விநியோகஸ்தர்கள் வீடு வீடாக சென்று விவரிக்கின்றனர்.
“பயோமெட்ரிக் பதிவு இல்லாதவர்களுக்கு சிலிண்டர் வழங்க முடியாது” என்ற பரவலான தகவல் வெளியானதால், ஏராளமானோர் ஏஜென்சி அலுவலகங்களை நோக்கி வருகின்றனர். தற்போது முகாம்கள் நடத்தப்பட்டு, பயோமெட்ரிக் பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பதிவுக்காக பழைய சிலிண்டர் பில், ஆதார் கார்டு எடுத்துச் செல்ல வேண்டும். ஆதாருடன் இணைக்கப்பட்ட கண் படம் எடுக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ‘எல்.பி.ஜி.’ செயலியில் ஆன்லைனாகவும் பதிவு செய்யலாம்.
இந்த முறையின் மூலம் மானியங்கள் தவறான நபர்களிடம் செல்வதை தடுக்க முடியும். இதனால் எல்.பி.ஜி. விநியோகத்தில் நியாயமான பயனாளர்களுக்கு மட்டுமே சிலிண்டர் வழங்க முடியும்.
                                     
                                 
                   
                       English Summary
                       LPG Gas cylinder Biometric