குறைந்த நீர்வரத்து! ஒகேனக்கல்லுக்கு 20,000 கன அடியாக சரிந்தது!!!
Low water flow water level at Hogenakkal has dropped to 20000 cubic feet
தமிழகம் மற்றும் கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக தர்மபுரி மாவட்டம் சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

இது கடந்த சில தினங்களாக, தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது.இந்த நீர்வரத்தானது இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 20,000 கனஅடியாக சரிந்துள்ளது.
இருந்தாலும், சுற்றுலாப் பயணிகளுக்கு 9-வது நாளாக ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது.
English Summary
Low water flow water level at Hogenakkal has dropped to 20000 cubic feet