காதலர்களே பாஜக அலுவலகத்திற்கும் வாருங்கள்!திருமணம் செய்து வைக்கிறோம்! புதிய ரூட்டை கையில் எடுக்கும் அண்ணாமலை!
Lovers come to the BJP office We are getting married
தமிழகத்தில் ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:“தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்ய தனி அரசு ஏற்பாடு இல்லை. அதனால், காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்திருக்கும். தமிழ்நாடு முழுவதும் உள்ள எங்கள் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம்,” என்றார்.சண்முகத்தின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்துக்கு இடமானது.
இதற்கு பதிலளித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “ஆணவக் கொலைகளுக்கு எதிராக பாஜக மிகவும் கடும் கோபத்தில் இருக்கிறது. யார் தவறு செய்கிறார்களோ, அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனக் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளார்:“பாஜக அலுவலகத்துக்கும் பல காதல் ஜோடிகள் தஞ்சம் புகுந்துள்ளனர். தனிப்பட்ட முறையில் எனக்கே பல சம்பவங்கள் தெரியும். ஒரு கட்சி அலுவலகம் என்பது எல்லோருக்கும் பொதுவானது – சாதி, மத வேறுபாடின்றி.
சில சமயங்களில் பெற்றோரை அழைத்து பேசுகிறோம். சில சமயங்களில் போலீஸ் அதிகாரிகளை அழைத்து நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறோம். நம்பி வரும் அனைவரையும் பாஜக அலுவலகம் வரவேற்கிறது,” என வலியுறுத்தினார்.
English Summary
Lovers come to the BJP office We are getting married