தமிழகத்தில் நுழைந்தது லாட்டரி சீட்டு..! தாலி அறுந்து வீதிக்கு வரப்போகும் தமிழக பெண்கள்..!! - Seithipunal
Seithipunal


பழனியில் தொடர்ந்து விற்கப்படும், நம்பர் லாட்டரிகள்...

லாட்டரி சீட்டை அரசாங்கம் தடை செய்ததற்கு, முக்கிய காரணம், அந்த சீட்டு வாங்குவதையே சிலர் தங்களது முழு நேர வேலையாகக் கொண்டிருந்தனர். அதனால், எண்ணற்ற குடும்பங்கள் நடுத் தெருவிற்கு வந்தன. 

மேலும், சிக்கிம், பூட்டான் போன்ற வெளி மாநிலங்களில் வெளியான உடனடி லாட்டரியும் விற்கப் பட்டது. இந்த லாட்டரியின் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப் பட்டன. அதற்கான ரிசல்ட் பேப்பரும், லாட்டரிச் சீட்டு விற்பரே வைத்திருப்பார். இதில், ஏகப்பட்ட தில்லு முல்லுகள் நடைபெற்றன.

பல சமயங்களில், போலியான லாட்டரி சீட்டு அச்சடிக்கப்ட்ட விவகாரம் எல்லாம் சர்வ சாதாரணமான நடைபெற்றது. இதை வாங்குபவர்கள், பெரிய பணக்காரர்களோ, நன்கு படித்தவர்களோ அல்ல. அன்றாடம் கூலி வேலை செய்யும் சாதாரண மக்கள்.

இதில் நடைபெறும், தில்லு முல்லு வேலைகள் பற்றிய விழிப்புணர்வு எல்லாம் அவர்களுக்கு கிடையாது. இதனால், இதே பழனியில், முன்பு பேருந்து நிலையத்திற்கு அருகில் விற்கப் பட்ட போது, இந்த மாதிரியான போலி உடனடி லாட்டரி சீட்டுகளை வாங்கி, பரிசு விழும் என்று ஏமாந்து, ஊருக்குப் போக பணம் இல்லாமல், பஸ் ஸ்டாண்டியே பரிதவித்தவர்கள் நுாற்றுக் கணக்கானோர்.

தற்போது, லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்ட நிலையில், பழனி பஸ் ஸ்டாண்ட், அடிவாரம், பூங்காரோடு, கிரி வீதிகளில், ரகசியமாக நம்பர் லாட்டரி விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது போலி என்று தெரிந்தும், இதையும் ஒரு போதைப் பழக்கமாகவே பழகி விட்ட அப்பாவி மக்கள், தற்போதும், இந்த நம்பர் லாட்டரியில் பணத்தைக் கோட்டை விட்டு, ஊருக்கு செல்லக் கூட முடியாமல், பரிதாபமாக தற்போதும், பழனி பேருந்து நிலையத்தில் பரிதாபமாக நிற்கின்றனர்.

இதனைக் காவல் துறையினர் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும், என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

LOTTERY COMING TO TAMIL NADU


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->