திருநெல்வேலி.! நின்று கொண்டிருந்த லாரி மீது பால் டேங்கர் லாரி மோதி விபத்து.! கிளீனர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி மோதிய விபத்தில் கிளீனர் உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கயத்தாறில் இருந்து கேரளாவுக்கு ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்திலிருந்து கேரளா கொல்லங்கோட்டுக்கு பால் ஏற்றிக்கொண்டு சென்ற டேங்கர் லாரி இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக வள்ளியூர் அருகே சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டேங்கர் லாரியில் இருந்த பால் சாலையில் கொட்டிய நிலையில் லாரியில் இருந்த தர்மபுரியை சேர்ந்த கிளீனர் மாது என்பவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மாதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lorry milk tanker lorry accident in Tirunelveli


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->