செங்கல்பட்டில் ஆசிட் லாரி கவிழ்ந்து விபத்து! 2 பேர் பலி! சாலையில் ஆறாக ஓடிய ஆசிட்! 
                                    
                                    
                                   lorry Accident chengalpattu 
 
                                 
                               
                                
                                      
                                            செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே, ஆசிட் ஏற்றிச் சென்ற லாரி சைக்கிளில் மோதியதில் திடீர் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் நிலைதடுமாறி கவிழ்ந்த லாரியில் இருந்த ரசாயனம் சாலையில் பரவியது.
இந்த கோர விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விரைவில் ரசாயனம் வெளியேறியதால், அருகிலுள்ள மக்கள் அதிர்ச்சி மற்றும் அச்சத்தில் பாதிக்கப்பட்டனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரசாயனக் கசியலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சீர் செய்யும் பணியும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
 
                                     
                                 
                   
                       English Summary
                       lorry Accident chengalpattu