குழந்தை இல்லாத ஏக்கம்... கதற வைத்த சோகம்...! தஞ்சாவூரில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட கணவன்-மனைவி...!
longing childless life heartbreaking tragedy husband and wife committed suicide one after another Thanjavur
தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மன வேதனையில் இருந்த கணவன்-மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகநாதன் (51). இவரது மனைவி வித்யா (42). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. குழந்தை இல்லாத குறை காரணமாக இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, வித்யா மகிழங்கோட்டை மேலக்காடு பகுதியில் உள்ள தனது சகோதரி வனிதாவின் வீட்டில் தங்கியிருந்தார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் அருகே ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த பகுதிக்கு வித்யா சென்றுள்ளார். அங்கு அவர் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உடலில் தீப்பற்றியதும் வலி தாங்க முடியாமல் வித்யா அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு வித்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக அதிராம்பட்டினம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மனைவி வித்யா தற்கொலை செய்து கொண்ட தகவலை சண்முகநாதனிடம் தெரிவிப்பதற்காக உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
ஆனால், எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.இதையடுத்து அவரது கைபேசிக்கு உறவினர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.இந்த சூழலில், மதுக்கூர் அருகே உள்ள பத்தாங்காடு கிராமத்தில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதன்பேரில் சண்முகநாதனின் அண்ணன் பரந்தாமன் அங்கு சென்று பார்த்துள்ளார்.அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தவர் தனது தம்பி சண்முகநாதன் என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி அழுதனர்.இதையடுத்து, மதுக்கூர் காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சண்முகநாதனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
longing childless life heartbreaking tragedy husband and wife committed suicide one after another Thanjavur