TNPSC குரூப்-1 தேர்வு ஹால் டிக்கெட் ரிலீஸ்...! தேர்வர்கள் உடனடியாக டவுன்லோட் செய்யத் தொடங்குங்கள்...! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். தேர்வர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள், தேர்வு அட்டவணை மற்றும் முக்கிய அறிவிப்புகளை தேர்வாணையம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, தேர்வுக்கு தயாராகி வரும் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தேர்வர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு கணக்கு மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 05/2026, நாள் 23.06.2026-ன் அடிப்படையில், நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி-1 பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது.கொள்குறி வகையில் நடைபெறும் இந்தத் தேர்வு, ஒளிக்குறி உணரி முறையில் மதிப்பீடு செய்யப்பட உள்ளது.

இத்தேர்வு வருகிற 27.09.2026 அன்று முற்பகலில் நடைபெறுகிறது.இதற்கிடையே, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு கணக்கு பக்கத்திற்குள் சென்று, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள தேர்வு மையம், தேர்வு நேரம் உள்ளிட்ட விவரங்களை விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்வது அவசியம்.

தேர்வு நாளன்று நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் இணையதளங்கள்:

https://www.tnpsc.gov.in

https://www.tnpscexams.in


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNPSC Group1 Exam Hall Ticket Released Candidates should start downloading immediately


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->