மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - எப்போது?
local holiday to three districts in tamilnadu
தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம் நவம்பர் 1ம் தேதி கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து தமிழ்நாட்டுடன் இணைந்தது. இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கன்னியாகுமரி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்க போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மாமன்னன் ராஜராஜ சோழனின் 138 வது சதய விழாவை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வருகிற அக்டோபர் 27ம் தேதி, சிவகங்கை மாவட்டத்தில், சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மருது சகோதரர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அக்டோபர் 27ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
local holiday to three districts in tamilnadu