ஒரே நொடியில் பறிபோன பிஞ்சு உயிர்...! வீட்டில் விளையாடிய 8 வயது சிறுவனை தீண்டிய பாம்பு... சோகத்தில் உறைந்த கிராமம்...! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன், பூனையை கடிக்க வந்த விஷப்பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆவடியை அடுத்த பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது 8 வயது மகன் நிச்சிஷ், ஆவடி கவுரி பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

வழக்கம்போல் நேற்று காலை வீட்டில் சிறுவன் நிச்சிஷ் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் இல்லாததால் வீட்டுக்குள் இருள் சூழ்ந்திருந்ததாக கூறப்படுகிறது.அந்த நேரத்தில் வீட்டில் இருந்த பூனை திடீரென பயங்கரமாக சத்தமிட்டு அலறியுள்ளது. பூனைக்கு என்ன ஆனது என்பதை பார்ப்பதற்காக சிறுவன் அதன் அருகில் சென்றுள்ளார்.

அப்போது பூனையை கடிக்க முயன்ற விஷப்பாம்பு திடீரென சிறுவனை கடித்துள்ளது. பாம்பு கடித்ததால் அதிர்ச்சியடைந்த சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார்.சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு பதறிய பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் மகனை காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், பூனையை கடிக்க வந்த விஷப்பாம்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

little boy life was lost instant snake bit 8 year old boy who playing at home village frozen grief


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->