நடுராத்தியில் கவிழ்ந்த சரக்கு லாரி - ஓடோடி வந்து அள்ளிச் சென்ற மதுபிரியர்கள்.! - Seithipunal
Seithipunal


நடுராத்தியில் கவிழ்ந்த சரக்கு லாரி - ஓடோடி வந்து அள்ளிச் சென்ற மதுபிரியர்கள்.!

திருவள்ளூரில் இருந்து விழுப்புரம் நோக்கி பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்பிய போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த பீர்பாட்டில்கள் அனைத்தும் உடைந்து ஆறுபோல் ஓடியது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் கீழே கிடந்த பீர் பாட்டில்களை அள்ளிச் சென்றனர்.

அதற்குள் அங்கு வந்த போலீஸார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.இதையடுத்து பீர்பாட்டில்களை எடுத்த வாகன ஓட்டிகள் அதனை ஆங்காங்கே வீசி விட்டு சென்றனர். இதைத்தொடர்ந்து போலீசார் இந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுனரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பதிப்பு எதுவும் ஏற்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

liquar lorry accident in chennai maduranthagam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->