பேத்தியை பாலியல் வன்கொடுமை தாத்தாவுக்கு சாகும் வரை ஆயுள் சிறை!
Life imprisonment for the grandfather until the grandmother dies from sexual abuse
சொந்த பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த தாத்தாவுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது,குறிப்பாக சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவும் அளிக்கும் சம்பவங்களும் இதில் அடங்கும்.இந்தநிலையில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ஒருவர். 51 வயதுடைய இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணமாகி 9 வயதில் சிறுமி இருக்கிறார். இந்தநிலையில் அந்த தொழிலாளி கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் சிறுமி வீட்டில் தனியாக இருந்த
சொந்த பேத்தியான சிறுமியை தொழிலாளி மிரட்டி தொடர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இந்த கொடூரத்தை தாங்க முடியாத சிறுமி இதுபற்றி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற அவர், இதுபற்றி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அதன்பேரில் தொழிலாளி மீது மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சுந்தரய்யா நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
English Summary
Life imprisonment for the grandfather until the grandmother dies from sexual abuse