முழு கோழியில் லெக் பீஸ் மாயம்...!ரூ.10,000 இழப்பீடு கட்ட நீதிமன்றத்தின் அதிரடி ஆணை...!
Leg piece missing from whole chicken Court orders Rs10000 compensation
கோவை மாவட்டம் ஜி.கே.எஸ். அவென்யூவை சேர்ந்த கிறிஸ்டோபர் எடிசன் என்பவர்,கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டதாவது,"கடந்த ஜனவரி 14-ம் தேதி குடும்பத்துடன், கோவை உப்பிலிபாளையம் மெயின் ரோட்டில் மணிகண்டன் நடத்தும் பிரியாணி கடைக்கு சென்றேன்.

அப்போது தந்தூரி சிக்கன் மற்றும் முழு பொரித்த கோழி (கிரில் சிக்கன்) ஆர்டர் செய்தேன். ஆனால் பரிமாறப்பட்ட சிக்கன் துண்டுகளில் ‘லெக்பீஸ்’ இல்லை என்பதை கவனித்தேன். இதுகுறித்து கேட்டபோது, ஊழியர்கள் சரியான பதில் அளிக்காமல், குறைபாட்டை சுட்டிக்காட்டிய எனக்கு குடும்பத்தினர் முன்னிலையிலேயே மிரட்டல் விடுத்தனர்.
மேலும், இறுதியில் வற்புறுத்தியதையடுத்து, சமையலறையிலிருந்து தாமதமாக சில ‘லெக்பீஸ்’ துண்டுகளை கொண்டு வந்தனர்.நான் முழு கோழிக்கு பணம் செலுத்தியும், அதில் இருந்த முக்கியமான துண்டுகளை வழங்காமல் ஏமாற்றியுள்ளனர். மேலும், விளம்பரப்படத்தில் காட்டியபடி வழங்காமல் உறுதியை மீறியுள்ளனர்.
இது நியாயமற்ற வர்த்தக முறையாகும். ஆகையால், பில் தொகையான ரூ.1,196-ஐ திருப்பி வழங்கி, மனஉளைச்சலுக்கான இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, மனுவை விசாரித்த நீதிபதி தங்கவேலு மற்றும் உறுப்பினர் மாரிமுத்து, ஓட்டல் உரிமையாளர், பாதிக்கப்பட்டவருக்கு மனஉளைச்சலுக்காக ரூ.10000 -மும் , வழக்குச் செலவுக்காக ரூ.5000 -மும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
English Summary
Leg piece missing from whole chicken Court orders Rs10000 compensation