சட்டம் ஒழுங்கு கேள்வி குறியாகி உள்ளது..சொல்கிறார் ஆளும் கட்சி MLA
Law and order is in question says ruling party MLA
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கேள்வி குறியாகி உள்ளது என்று சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 4-தினங்களுக்கு முன்பு உமாசங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் அப்பகுதியில் உள்ள ஆதாரங்களை விரிவாக போலீசார் விசாரித்ததில் குற்றம் சாட்டப்பட்ட,8 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்த கொலை சம்பவம் புதுச்சேரி அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.இந்தநிலையில் இதுகுறித்து புதுவை ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவரை கூறியதாவது:உமாசங்கர் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வலியுறுத்தி இருந்தேன்.கடந்த சில தினங்களாக ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் இல்லம் உள்ளிட்ட ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.
புதுச்சேரியில் தற்போது சட்டம் ஒழுங்கு சரியான முறையில் இல்லாத காரணத்தால் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளேன்.மிக மோசமான குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை என்கவுண்டர் மாதிரியான அதிரடியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்-சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் என கூறியுள்ளார் .
English Summary
Law and order is in question says ruling party MLA