நெஞ்சை உறையவைக்கும் பின்னணி! மனைவியைக் கொன்று தற்கொலை செய்த கணவன்...! மாமியார் செல்போனுக்கு வந்த அந்த 'கடைசி வீடியோ'...! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் குடும்பத் தகராறு விபரீதமாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டதாக கூறப்படும் கணவர், காரிலேயே அவரைக் கொலை செய்துவிட்டு, உறவினர்களுக்கு காணொலி அழைப்பில் தகவல் தெரிவித்த பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம், பேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கேசகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு (41). சிக்கமகளூருவில் பேக்கரி தொழில் நடத்தி வந்த இவர், தனது மனைவி ககனா (38) மற்றும் 12, 6 வயதுடைய இரு மகன்களுடன் வசித்து வந்தார். திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிய நிலையில், கடந்த சில நாட்களாக தம்பதியருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படும் ரகு, இதுதொடர்பாக ககனாவுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த கருத்து மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து குடும்பத்தில் பதற்றமான சூழலை உருவாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தன்று, ரகு தனது மனைவியுடன் காரில் சொந்த ஊரான கேசகோடு நோக்கி புறப்பட்டார். பயணத்தின் போது மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் ஆத்திரமடைந்த ரகு, காரிலேயே மனைவியை கொலை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த கொலைச் சம்பவத்தை அவர் காணொலியாக பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

மாலை நேரத்தில் கேசகோடு கிராமத்தை அடைந்த ரகு, தனது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களுக்கு காணொலி அழைப்பின் மூலம் தொடர்புகொண்டு, மனைவியை கொன்றுவிட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.அதுமட்டுமின்றி, சம்பவம் தொடர்பான காணொலியையும் அவர்களுக்கு அனுப்பியதாகவும், பின்னர் தானும் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீண்டும் தொடர்புகொள்ள முயன்றபோதும், அவரது செல்போன் அணுக முடியாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியபோது, கேசகோடு கிராம எல்லைப் பகுதியில் சாலையோர மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் ரகு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அரேஹள்ளி காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் ரகுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ரகு தனது மனைவியின் உடலை கிராமம் அருகே உள்ள யகட்டி கால்வாயில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மீட்புக் குழுவினரின் உதவியுடன் அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவலர்கள், பல்வேறு கோணங்களில் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.ரகு உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பு உறவினர்களுடன் மேற்கொண்ட காணொலி அழைப்பின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சோகச் சம்பவம் கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

last video that came cell phone husband in law who killed his wife and committed suicide


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->